திருப்பத்தூர்: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (21.03.2026) நடைபெற்ற இந்த ஆய்வில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌதம் பேட்டை, அவ்வை நகர், புதுப்பேட்டை ரோடு, சிவராஜ் பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டார். மேலும், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவ்வை நகர், வெங்களாபுரம், மடவாளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளையும் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தார்.
















