திருநெல்வேலி: இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவிட்டன. பொதுமக்கள் இத்தகைய மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
இந்த நிதி மோசடி செய்பவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு email, SMS, WhatsApp or Telegram போன்றவற்றிலிருந்து வரும் செய்திகள் அல்லது நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதாக கூறி போலியான மின் வணிக தளங்களில் இருந்து வரும் செய்திகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
சந்தேகத்திற்கிடமான விளம்பரச்செய்தி அல்லது அழைப்பை நீங்கள் பெற்றால் அது மோசமானது என்று நீங்கள் கருதினால், இதுகுறித்து அந்த மின் வணிக தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தயங்காமல் புகார் அளிக்கலாம்.
கண்மூடித்தனமாக Google search ஐ நம்புதல் வேண்டாம்.
ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும்.
மேலும் 155260 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.