திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்திய சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து காவல்துறையினர், மற்றும் அனைத்து அமைச்சுப் பணியாளர், ஆகியோருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்