திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் கூறியதாவது:-
நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும், புதிதாக 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரோந்து வாகனங்கள் தாழையூத்து உட்கோட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் -1 எனவும் மற்றொரு வாகனம் நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-2 எனவும் அழைக்கப்பட்டு, காவலர்கள் பணியமர்த்தப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், நெல்லை மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் மரிய கிளாட்ஸன் ஜோஸ், நெல்லை மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்