திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) விருதை வென்றது. நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சார் முன்னெடுப்புகளுக்கு ளுமுழுஊர் அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .
திருநெல்வேலி மாநகர காவல்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் “மக்களை நோக்கி மாநகர காவல்” என்ற புதிய திட்டப் பணிகள் டெல்லியில் நடைபெற்ற “ஸ்கோச்” விருது (SKOCH AWARD) வழங்கும் விழாவில் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
மக்களை நோக்கி மாநாகர காவல் திட்டத்தின் கீழ்கண்ட மக்கள் நலன்சார் திட்டங்கள் அமல்படுத்த பட்டது.
1. மக்களை நோக்கி மாநகர காவல்
ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவர்களது காவல் நிலைய எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து விழுப்புணர்வு ஏற்படுத்துவர்.
2.டியர் டிசி – மதிப்புமிகு மாணவன்
இத்திட்டத்தின் படி பள்ளிகளில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது பெற்றோர்களை மாணவர்கள் தலைக்கவசம் அணிய வலியுறத்திய பின்னர் அதனை கடிதம் மூலம் டிசிக்கு தெரியப்படுத்த வேண்டும். சிறந்த கடிதங்களுக்கு மதிப்புமிகு மாணவன் சான்றிதழும் பரிசும் வழங்கப்படும்.
3.நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை.
இத்திட்டத்தின் படி வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் CCTV யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சாலையை நோக்கி CCTV பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் .
4. வேர்களைத்தேடி
இத்திட்டத்தின்படி தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகளை கணக்கெடுக்கப்பட்டு பட்டா புத்தகம் வழங்கப்படும் . காவலர்கள் வாரந்தோறும் சந்தித்து அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வர்.
5 .சமூக ஊடகங்களில் மாநகர காவல்
இத்திட்டத்தின் படி நெல்லை மாநகர காவல்துறை பேஸ்புக், டிவிட்டர், இன்ஸடாகிராம் மற்றும் யூ டயூப் தளங்களில் இயங்கி வருகிறது. மீம்ஸ் மூலம் குற்றத்தடுப்பு மற்றும் விழிப்புணர்விற்காக லுழரவுரடிந உhயnநெட துவங்கியது நெல்லை மாநகர காவலர் துறையே.
மேலும் இ ரசிகர் மன்றங்கள் மூலம் சமூக நலத்திட்ட பணிகள், அரசு பணிகள் மற்றும் அதற்கான பயிற்சி குறித்த விழிப்புணர்வு, திருநங்கைகள் முன்னேற்ற ஆலோசனைகள் இ திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற நடவடிக்கைகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது .
இன்று (29-11-19) புது டெல்லியில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் அவர்களிடமிருந்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ச. சரவணன் விருது பெற்றார் . தமிழகத்தில் சென்னை காவல்துறைக்கு அடுத்து விருது பெறுவது திருநெல்வேலி காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
“ஸ்கோச்”( SKOCH) வெள்ளிப் பதக்கம் வென்றஇ திருநெல்வேலி மாநாகர காவல்துறைக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்