திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக சமூகவலைதளங்கள் மூலமாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம்.
நேற்று திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த @SaiDhanya என்பவர் தான் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் , தனது மூத்த குடிமக்களான தனது பெற்றோர் தனிமையில் வசிப்பதால் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அழைக்க தொடர்பு எண் கொடுக்குமாறு கேட்டிருந்தார்.
எங்களது காவலர்கள் இன்று அவர்களை நேரில் சந்தித்து முக கவசங்கள் மற்றும் சானிடைசர் திரவங்களை கொடுத்துவிட்டு எங்களது “ வேர்களைத்தேடி” என்ற முதியோர் பாதுகாப்பு திட்டத்திலும் சேர்த்து அவசர தொடர்பு எண்களையும் ( நெல்லை காவல் கட்டுபாட்டு அறை 0462 2562651 & 9498181200) அளித்து வந்தோம். இதனை அவருக்கு டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தேன் .
இச்செயலை பாராட்டி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் IPS , வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையே இதற்கு காரணம் என்றால் மிகையாகாது.
இத்தருணத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் IAS, உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் IAS , மாநகராட்சி ஆணையர் கண்ணன். ஆகியோரின் தொடர் உதவியும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானதாக உள்ளது.
பாராட்டுதல்கள் அனைத்தும் திருநெல்வேலி மாநகர காவலர்களைக்கு உரித்தானது.
“நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை”
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.