திருநெல்வேலி: ‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை கடந்த ஆண்டு சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றனர்.
டெல்லியில் உள்ள SKOCH நிறுவனத்தின் சார்பில் 2019 ம் ஆண்டுக்கான சிறந்த செயல்பாட்டிற்கான காவல் விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறையின் “மக்களை நோக்கி மாநகர காவல்” திட்டம் முதற்கட்டமாக தேர்வாகியுள்ளது.
மதிப்புமிகு மாணவன் , வேர்களைத் தேடி மற்றும் நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை திட்டங்களை உள்ளடக்கிய இம்முயற்சிகளுக்கு பொதுமக்கள் உங்கள் பெயரினை பதிவு செய்து ஆன்லைன் மூலம் 18ம் தேதி பிறபகல் 12 மணிக்குள் ஓட்டளிக்க வேண்டப்படுகிறது.
இணைப்பு:
http://vote.skoch.in/vote-group-c-62nd/
வழிமுறைகள்
Step 1 – login and register with mobile and email
Step 2 – provide otp sent to your mobile.
Step 3 – open the email and activate a link sent from skoch award .
Step 4 – after activation, pls click show nomination and click vote for number 20 – “city police towards public” Tirunelveli city
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்