சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது.
திருநெல்வேலி மாவட்டத்தில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரசன்னா குமார், இ.கா.ப., தலைமையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1500 காவலர்களுடன் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சட்ட விரோதமாக மதுபானம் விற்கும் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற குற்றத்திற்காக, 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 53 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 1742 மது பாட்டில்கள், ரொக்கமாக ரூபாய் 1,58,990 மற்றும் 3 பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா வைத்திருந்த நபர் கைது.
திருநெல்வேலி முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா், வேல்ராஜ் தலைமையிலான காவலர்கள் 18.01.2026 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது முன்னீா்பள்ளம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இட்டேரியை சோ்ந்த மாரியப்பன் (52) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சுமாா் 4 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் மிரட்டல், வழிப்பறி மற்றும் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ் (30) மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் பழவூர் காவல் ஆய்வாளர், சுரேஷ் குமார் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், பிரகாஷை பாளை மத்திய சிறையில் (18.01.2026) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















