திருநெல்வேலி : மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நேரு தெருவை சேர்ந்த ஜோசப் (50), என்பவர் மூலக்கரைப்பட்டி பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேற்படி குற்றவாளி ஜோசப் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி, அவர்கள் மூலக்கரைப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆழ்வார், அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியின் கடை மற்றும் வீட்டை சோதனை செய்ததில் 209 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி போலீசார் குற்றவாளி ஜோசப்பை கைது செய்து 209 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.