திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் (16.05.2020) சீவலப்பேரி காவல் நிலைய குற்ற எண்:பிரிவு 147,148,341,294(b),352,506(ii)IPC, குற்ற எண்:பிரிவு 379 IPC (Sand theft) வழக்கில் எதிரியான சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் 34 த/பெ முருகையா என்பவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சீவலப்பேரி காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) திருமதி.சோபா ஜென்ஸி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி ஆறுமுகம் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 16.05.2020 தேதி அடைக்கப்பட்டனர்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி