விருதுநகர்: ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் 25 பேருக்கு ஆவியூர் காவல் நிலையம் சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பூ.பெருமாள் இ.கா.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சகாய ஜோஸ், காவல் ஆய்வாளர் திருமதி.காஞ்சனா தேவி, உதவி ஆய்வாளர்கள் திருமதி.ஜெயலட்சுமி, திரு.பால்பாண்டியன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.