தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெறுவதாக கும்பகோணம் காவல்துறையினருக்கு தொடர்ந்து வந்த புகார்கள் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராமன் TPS அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு.கீர்த்திவாசன் TPS அவர்களின் மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில்குமார், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தார்கள். இந்நிலையில், பலவித விசாரணைக்கு பிறகு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இத்தொடர் திருட்டில் ஈடுபட்டது.
பந்தநல்லூர் சாயினாபுரம் என்ற ஊரை சேர்ந்த ஜோதிமணி மகன் ஆசை மணி ( 25). என்பவர் என்பது தெரிய வந்தது மேலும் இவருக்கு தஞ்சை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை , கோயம்புத்தூர் ஆகிய பகுதி காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆசைமணி எனும் அந்நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டிருந்த போது அந்நபர் திடீரென்று காவல்துறையினரி டமிருந்து தப்பித்து ஓடினார் , ஓடிய அவர் அசூர் பைபாஸ் அருகேயுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்படி ஆசைமணி என்ற நபரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்