தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 85,000/- பணம் மற்றும் பொருட்களும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 40,000/- பணம் மற்றும் சிவந்தாகுளம் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீ கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 1000/- பணத்தையும் மர்ம நபர்கள் அடுத்தடுத்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் நேற்று 08.12.2022 அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. அய்யப்பன், உதவி ஆய்வாளர்கள் திரு. கங்கைநாத பாண்டியன், திரு. சிவக்குமார், திரு. பாஸ்கரன் மற்றும் தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ் முதல் நிலை காவலர்கள் திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், காவலர்கள் திரு. செந்தில்குமார், திரு. திருமணிராஜன், திரு. முத்துபாண்டி, ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் அப்பகுதில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (எ) (30) கார்த்திக் (23), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (22), மற்றும் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி மகன் சாம் ஜோஸ்வா (22), ஆகியோர் மேற்படி கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளிகள் கார்த்திக் (எ) கார்த்திக், மூர்த்தி மற்றும் சாம் ஜோஸ்வா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் கார்த்திக் (எ) கார்த்திக் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 13 வழக்குகளும், குற்றவாளி மூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் என 10 வழக்குகளும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 13 வழக்குகளும், குற்றவாளி சாம் ஜோஸ்வா மீது வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.