திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் உத்தரவின் படி திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்து காவலர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குடவாசல் காவல் நிலைய திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான – எண்கன், சிவராமன் காலனியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் குருவி @ குரு சக்தி (வயது-39). என்பவர் கைது. கைது செய்யப்பட்ட மேற்படி குற்றவாளியிடமிருந்து 23 கிராம் தங்க நகைகள் மற்றும் 650 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்படி நபரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இவர் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் குணம் உடையவர். இவர் மீது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் , திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்ட காவல் நிலையங்கள் என மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மிக சிறப்பாக செயல்பட்டு மேற்படி குற்றவாளியை கைது செய்த குடவாசல் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.கோபிநாத் தலைமையிலான தனிப்படை Gr-I 1350 மனோகரன், Gr-I 843 செந்தில்குமார், Gr-I 1138 ஜான் நிமோநியன், Gr-I 232 மதன்குமார் மற்றும் PC 478 எழில்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் மிக கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.