சென்னை: சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்து, திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட சைதாப்பேட்டை உதவி ஆணையாளர் திரு. S. A. சீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. A. கலையரசன் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். காவல் துறையினரின் விரைந்து செயல்பாடும், குற்றங்களை கட்டுப்படுத்தும் உறுதியும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















