தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் ஆகிய காவல் பகுதிகளில் வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்தல் மற்றும் செல்போன் திருடுதல் போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பதுங்கியிருந்த குற்றவாளியை பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் பேராவூரணி காவல் ஆய்வாளர் ஆகியோர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராம்குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த 10 சவரன் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 01 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் சிறையில் அடைத்தனர்.