தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன மற்றும் திருட்டு போன 120 க்கும் மேற்பட்ட அலைபேசிகளை கண்டுபிடித்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜாராம் த.கா.ப. அவர்கள் தலைமையில் அலைபேசி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனிருந்தார்.மேலும் இதற்கு சிறப்பாக பணிபுரிந்த தஞ்சை தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சம்மந்தம் மற்றும் பெண் காவலர்கள் அகிலா மற்றும் தேன்மொழி ஆகியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.