திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் ஆலிவலம் காவல் சிறக எல்லைக்குட்பட்ட ஆலத்தம்பாடி கடை தெருவில் உள்ள அடகு கடையின் கதவை உடைத்து கடையில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு திருட்டு குறித்து ஆய்வு செய்து சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் திருத்துறைப்பூண்டி காவலா ஆய்வாளர் காவலர் ஆகியோர்களுக்கு வழக்கில் புலன் விசாரணை செய்வது குறித்தும் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை குறித்தும் தக்க அறிவுரை வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்