திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
இதனடிப்படையில் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா IPS., அவர்கள் வள்ளியூர் உட்கோட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளான வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை, ராதாபுரம், பணகுடி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரையின் படி தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் தூங்கும்போது கதவை தாழ்பாள் போட்டு தூங்க வேண்டும் எனவும், ஊரில் அடையாளம் தெரியாத நபர் யாரேனும் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
, பெண்கள் காலையில் கோலம் போடும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், மதிய நேரத்தில் தூங்கும் போதும் வீட்டின் தாழ்ப்பாள் போட்டு துங்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.