தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் (23.01.2026) அன்று நடைபெற்ற சிறப்பு நடவடிக்கையில், மருதவக்கலூரி காவல் நிலைய எல்லையில் திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 111 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. நிகழ்வில், உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரா உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















