காஞ்சி: சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ஷாஜன் ராஜ் என்பவர் கடந்த 14.08.21 அன்று தனது இருசக்கர வாகனத்தில் பாலுச்செட்டிச்சத்திரத்தில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகளை விற்க சென்றபோது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை தவறவிட்டதாக பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்
வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்ட பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள், சம்பவயிடத்தில் விசாரணை செய்ய கேமராக்களை ஆய்வு செய்த போது சம்பவ நாளன்று நகை வியாபாரி ஷாஜன் ராஜ் வாகனத்திலிருந்து நகை மற்றும் பணம் உள்ளடங்கிய பையானது தவறுதலாக கீழே விழுந்ததை பார்த்தகுற்றவாளி சேட்டு ( எ) சேது (40 மாரியம்மன் கோயில் தெரு, கீழ்நெல்லி, வெம்பாக்கம் தாலுக்கா அதனை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்காமல் திருடி சென்றது தெரியவந்தது .
குற்றவாளியை பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர், நேற்று (16.08.21) குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து களவு பொருட்கள் சுமார் ரூ.1,40.000 மதிப்புள்ள தங்கநகை மற்றும் பணம் ரூ 93.000 / ஆகியவை மீட்கப்பட்டு குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர், அவர்கள் இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளியயுைம் களவுப்பொருட்களையும் கண்டுபிடித்த பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்.