மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலூர் ஒத்தக்கடை காவல் நிலைய பகுதிகளில் அடிக்கடி பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களின் பணம் திருடு போவதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் ஆகியுள்ளன இதனை அடுத்து மேற்படி சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வி. பிரியதர்ஷினி, அவர்களின் மேற்பார்வையில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் திரு. புகழேந்தி, தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மேற்படி குற்ற செயலில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மண்டலம் ஓ.ஜி குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவரின் மகன் கிஷோர், முனுசாமி மகன் சதீஷ், முனிரத்தினம் மகன் சந்திரா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜு, ஆகியோர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் தொடர்ச்சியாக மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலூர் ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தானும் தனது கூட்டலைகளும் பொதுமக்களை காதை திசை திருப்பி 5 நபர்களிடமிருந்து பணத்தை திருடுகிறதாக ஒப்புக்கொண்டார் அதன் பெயரில் ரூபாய் பத்து லட்சத்து 85 ஆயிரம் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது இந்த ஐந்து வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்து பணத்தை மீட்ட தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டியதோடு தலைமறைவாக உள்ள இதர குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்யும் ஆறு அறிவுறுத்தினார்கள் மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதும் இது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
திரு.விஜயராஜ்