விழுப்புரம் : விழுப்புரம் , செஞ்சி அருகே கடலாடிகுளம் கூட்டுரோட்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கள்வாசல் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (22), முனிவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிவண்ணன் (24), ஆகியோர் என்பதும், இதுவரை 7 மோட்டார் சைக்கிள்களை திடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் காவல்துறையினர், கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.