மதுரை : மதுரை திருப்பரங்குன்றம், மற்றும் திருநகர் பகுதிகளில், செயின் பறிப்பு மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. எனவே, இது தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில்குமார், உத்தரவின் பெயரில், காவல் துணை ஆணையர் திரு.சீனிவாச பெருமாள், நேரடிப்பார்வையில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் திரு.ரவி, தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.
எனவே , இதில் தொடர்புடைய திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஜனாபுல்லா, ஜாபர், ராஸ்யா, சிதரா, ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளை செயின் பறிப்பு, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் தொடர்புடையது தெரியவந்தது. எனவே, இவர்களிடமிருந்து சுமார் ரூ.18,60,000/ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், இரண்டு மற்றும் நான்கு வாகனங்களை, பறிமுதல் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி