திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி 58 என்பவர், இன்று 27.08.2021-தேதி நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த TN25 AA 1774 பதிவெண்கொண்ட JCB வாகனத்தை யாரோ ஒரு மர்மநபர் திருடிகொண்டு செல்வதாக, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த, திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.P.முத்து அவர்களிடம் அளித்த தகவலின் அடிப்படையில்,
துரிதமாக செயல்பட்டு உடனடியாக வாக்கி டாக்கி மூலம் திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் தொடர்புகொண்டு தகவலை தெரியபடுத்தியதின் மூலம், சாலை பாதுகாப்பு ரோந்து வாகனம் I-ல் (Road Safety Patrol-I) பணியிலிருந்த திரு.K.பாஷு சிறப்பு உதவி ஆய்வாளர், கீழ்பெண்ணாத்தூர் காவல்நிலையம் மற்றும் திரு.A.சுரேஷ், முதல்நிலைக் காவலர் எண். 1836, தி.மலை நகர போக்குவரத்து காவல்நிலையம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு மணலூர்பேட்டை ரோடு பைபாஸ் சாலை சந்திப்பில் திருடு போன JCB யை மடக்கி பிடித்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 1)பாண்டிதுரை,25, 2) திருமால், 25, 3) சுபாஷ், 21, ஆகிய மூவரையும் பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் குற்றவாளிகளை விசாரணை செய்ததில் திருவண்ணாமலை தேனிமலையில் திருடு போன JCB யையும் இவர்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், மெச்சத்தகுந்த பணியை செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.P.முத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.பாஷு மற்றும் முதல் நிலை காவலர் திரு.A.சுரேஷ் ஆகிய மூவரையும் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.