சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை, தியாகராஜா காலேஜ், வின்கோ நகர் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்க சிறப்பு காவல் படை வீரர்களை நியமித்து சுற்றுக் காவல் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் 30.08.2020-ம் தேதியன்று திருட்டில் ஈடுபட்டு வந்த நபர்கள் தாங்கள் இரயில் நிலையத்தில் திருடும் போது காவல்துறையினரை கண்டதும் தப்ப முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த சிறப்பு காவல் படை வீரர்கள் வெங்கடேசன், வசிம் அகமது, கமலக்கண்ணன் ஆகியோர்கள் திருடர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார்கள். அவர்களிடமிருந்து இருந்து திருடப்பட்ட கம்பிகள் கைப்பற்றப்பட்டு அருகில் உள்ள காவல்நிலையத்தில் திருடர்களை ஒப்படைத்தனர், இதையறிந்த அப்பகுதி மக்கள் காவலர்களை பாராட்டி ஊக்கம் அளித்தனர்.