சென்னை: மடிப்பாக்கம் போலீசார் எடுத்த விரைவில் நடவடிக்கையால், திருடப்பட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. ச. ஸ்ரீராம் என்ற நபர், பொனியம்மன் கோவில் 2வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில், அண்ணாநகர் திருமங்கலத்தில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது நண்பருடன் ஸ்ரீராம் வீட்டிற்கு வந்தார். ரப்பிடு கட்டணம் ரூ.200 தர வேண்டும் என பேசும் வேஷம் போட்ட கார்த்திக், அவருக்குத் தெரியாமல் ஸ்கூட்டர் சாவியை எடுத்து வண்டியுடன் ஓடிப்போனார்.
வண்டி திருடப்படுவதை உணர்ந்ததும் ஸ்ரீராம் உடனே 100 ஆம் எணிக்கு அழைத்து புகார் அளித்தார். திரு தமிழன் என்ற காவல் அதிகாரி உடனே வந்து புகாரை பதிவு செய்து விசாரணை தொடங்கினார். இந்நிலையில், நேற்று இரவு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி, கார்த்திக்கிடம் நேரடியாக அழைத்து பேசினார். அவனிடம் வண்டியை திருப்பித் தருமாறு கட்டளையிட்டார். தொடர்ந்து நடந்த போலீஸ் நடவடிக்கையால் இன்று காலை ஸ்ரீராமின் வண்டி மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்புக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும் மடிப்பாக்கம் காவல்துறையின் விரைந்து செயல்படும், பொறுப்புணர்வும் பாராட்டதக்கது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
சந்திர மௌலி