சென்னை: மொபைல் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த, தலைமை காவலரை, துணை ஆணையர் பாராட்டினார்.சென்னை, ராயப்பேட்டை, சுந்தரேஷ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன், 36. இவர், நேற்று முன்தினம் காலை, போயஸ் கார்டன், பென்னி சாலையில், நடைபயிற்சியில் ஈடுபட்டார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், அவரது மொபைல் போனை பறித்து, தப்ப முயன்றார்.
அப்போது, அங்கு சாதாரண உடையில் வந்த, தமிழ்நாடு ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தலைமைக் காவலர் யுவராஜ், மர்ம நபர்களை மடக்கி பிடித்து, தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் பிடிபட்டவர், செம்மஞ்சேரி சேர்ந்த கார்த்திக் என, தெரியவந்தது. மேலும், செம்மஞ்சேரி காவல் நிலைய குற்ற வழக்குகளில் தலைமறைவாகி, தேடப்பட்டு வரும் குற்றவாளி என, தெரியவந்தது. திருடனை மடக்கி பிடித்த யுவராஜை, தி.நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் பாராட்டினார்.