திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலைய சரகத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 25.01.19 ம் தேதி அன்று வங்கி லாக்கர் ரூமை துளையிட்டு உள்ளே நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் லாக்கரை உடைத்து வாடிக்கையாளர் வைத்திருந்த தங்க நகை 470 சவரன் மற்றும் பணம் ரூ. 19 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றதாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரில் கொள்ளிடம் காவல் நிலைய குற்ற எண்: 20/19 U/S 457, 380 IPC வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகளை தேடிய போது வழக்கின் எதிரிகளில் ஒருவரான ராதாகிருஷ்ணன் (28) என்பவர் திண்டுக்கல் மாவட்டம், கண்ணாப்பட்டியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்று 14.10.19 ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கண்ட நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களை செய்பவராக இருப்பதாலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி மேற்கண்ட குற்றவாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 28.11.2019 (இன்று) திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி