திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் நிகழ்ச்சி திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹாக் இ.கா.ப அவர்கள் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் முதல் முறையாக திருச்சி சரகதிற்கு உட்பட்ட திருச்சி மாவட்டத்தில் 19 .12 .2019 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற நபர்களின் இருப்பிடத்தை கண்டறியும் நிகழ்ச்சியை முதன் முதலில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் 53 பேர் கலந்து கொண்டார்கள் இதில் 13 பேரின் இருப்பிடம் கண்டறிந்து 4 பேர் அவர்களது குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள நபர்களையும் அவர்களது குடும்பத்தில் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் காவல்துறை மூலம் நடந்து வருகிறது தொடர் நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற நபர்கள் 22 பேர் கண்டறிந்து அவர்களை அவர்களது குடும்பத்திலும், இல்லத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக இன்று 21.12.2019 நடைபெறும் சாலையோர மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற நபர்கள் 35 பேர் அன்பாலயம் இல்லத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடன் ரயில்வே காவல்துறை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, BHEL அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாய்வு செய்து அவர்களுடைய குடும்பத்தாரை, முகவரியை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ,டெல்லி மற்றும் இதர மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்களை அடையாளம் காணப்பட்டது. இதில் மூன்று நபர்களின் முகவரி கண்டறியப்பட்டது. மீதம் உள்ள நபர்களின் முகவரியை கண்டுபிடிக்கும் நிகழ்வில் திருச்சி மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் P.அஜீம் அவர்கள் வரவேற்றார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருவேங்கடம் அவர்கள் முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் அன்பாலயம் நிறுவனர் செந்தில் குமார் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி