திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு & குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் காவலன் செயலி பதிவிறக்கம் செய்வது குறித்தும் காவலன் செயலி பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலன், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு குழந்தைகள் மீதான வன்முறை குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்யப் பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி