திருச்சி : திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி திருச்சி மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.B.மணிகணிடன் அவர்களின் மேற்பார்வையில், துறையூர் வட்டம் டாப்- செங்காட்டுப்பட்டி மலை கிராமத்தை சுற்றியுள்ள 15 கிராம மக்களுக்கு, மூன்று நாட்கள் அவர்கள் இடத்தில் தங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 03.10.2020 முதல் 05.10.2020 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முதல் நாள் விழிப்புணர்வில் 200 கிராம மக்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேடயம் திட்டத்தின் கைபேசி எண்கள் 9384501999, 63830 71800 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ஆஜீம், முசிறி காவல் ஆய்வாளர் திருமதி.லெட்சமி அவர்களும் கலந்து கொண்டு கொரோனோ நோய் தொற்று பரவல் தடுப்பில் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்றும் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் குடும்ப வன்முறை, வரதட்சனை, பெண்களுக்கான பாலியல் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்