திருச்சி : தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை விளக்கும் கூட்டம் இன்று 1.9.2020 திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல் துணை காவல் ஆணையர் திரு.பவன் குமார் ரெட்டி, IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து கோவில்கள், கிருத்துவ தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசலைச் சேர்ந்த சுமார் 40 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மேலும் மற்றொரு கூட்டமாக திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை சார்ந்த சுமார் 40 உரிமையாளர்கள் மற்றும் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளுக்கு 01.09.2020 முதல் அனுமதி அளிக்கப் படுகின்றது:
1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே e-pass இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
2) அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்படுகிறது.
3) மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகள் உடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
4) வணிக வளாகங்கள் அனைத்தும் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளும் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆகிய அனைத்து அரசு ஆணைகள் தெளிவாக விளக்கப்பட்டது.