திருச்சி : திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு பதவியில் இன்று 23.07.2020 காலை திரு.A.பவன்குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அவர் கடந்த 2016-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் நேரடியாக தாக்கலாகி, 2016 முதல் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகத்தில் ASP ஆக பணிபுரிந்தும், தற்போது பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு பதவியில் பொறுப்பேற்றுள்ளார்கள். காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருச்சி மாநகரம் அவர்கள் “திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி மாநகரம் அவர்களின் உத்திரவின் படி சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக மேற்கொள்வேன்” என தெரிவித்தார்கள்.போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.