திருச்சி : திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் பெண் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான, உடல்நலம், மனநலம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து தலைமை உரையாற்றினார்கள். திருச்சி மாநகர துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திருமதி.N.S. நிஷா ஐபிஎஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உறையூர் ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவர் திருமதி .ரமணி தேவி அவர்கள் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்களை கண்டறியும் அறிகுறிகள் மற்றும் அவைகள் வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்தும் விளக்க உரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறையை சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, திருச்சி மாநகர காவல் துறையில் முதன் முறையாக நடத்தப்பட்டதாகவும் மிகவும் பயனுள்ள பயனுள்ள வகையில் அமைந்ததாகும் கலந்து கொண்ட பெண் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி