திருச்சி: திருச்சி மாநகரில் சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், மக்களிடையே அச்சத்தையும். பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ. காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் பதற்றமடையாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
மேலும் பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருச்சி மாநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 96262 73399 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு (Child Help line) எண்.1098, பெண்கள் பாதுகாப்புக்கு உதவி எண்.181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தஙகள் அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் குழந்தை கடத்தல் தொடர்பான பொய்யான செய்திகளை பரப்புவோரை பற்றிய தகவல் தெரிந்தால், அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி., இ.கா.ப., அவர்களால் தெரிவித்து கொள்ளப்பட்டுகிறது.