திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில் காவலர்கள் பணியின் போது மன அழுத்தத்தை குறைப்பது பற்றியும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா மற்றும் உடற்பயிற்சி அவசியம் குறித்தும் திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் காவலர்கள் பணியின் சுமை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளாகின்றனர், அந்த மன அழுத்தத்தை குறைப்பது எவ்வாறு என்றும் தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா மற்றும் கராத்தே போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் காவலர்கள் பணிகளின் பொழுது உள்ள பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் மக்களிடம் அவர்களின் குறைகளை கூறிய நேரத்தில் நிவர்த்தி செய்வது பற்றியும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்