திருச்சி : திருச்சி சிறையில் ஒன்றே கால் ஏக்கரில் கைதிகள் சாகுபடி செய்த கரும்புகள் நேற்று அறுவடை செய்யப்பட்டது. நேற்று சிறைத்துறை டிஐஜி திரு.சண்முகசுந்தரம் மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு.சங்கர் ஆகியோர் மேற்பார்வையில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்தனர்.
திருச்சி புதுக்கோட்டை ரோட்டில் உள்ள சுப்பிரமணியபுரத்தில், திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் என 1200க்கும் மேற்பட்டவர்கள் கைதிகளாக உள்ளனர்.
அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்து, பல்வேறு தொழில்கள் சிறையில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. திருச்சி மத்திய சிறையில் உள்ள திறந்தவெளியில் அட்டை தயாரிக்கும் தொழில், மெழுகுவர்த்தி, கேக், பிரட் உள்ளிட்ட உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்றல், ஆடு மாடு வளர்த்தல், விவசாயம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தண்டனைக் கைதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது குறித்து மேலும் சிறைத்துறை டிஐஜி திரு.சண்முகம் கூறியதாவது, கரும்புகளை விற்பனை செய்து கிடைக்கும் தொகையில் 40% சிறை பராமரிப்புக்கும், 40% நிர்வாக செலவுக்கும், 20% கைதிகளுக்கும் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 1 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 40,000 எண்ணிக்கையிலான கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு, அவை அனைத்தும் தைப் பொங்கலை ஒட்டி, தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். தோட்டத்தில் ஒரு நாள் தண்டனை கைதி வேலை செய்தால் அவர்களின் தண்டனையிலிருந்து ஒருநாள் கழிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி