திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்தவும், காவல்துறையோடு பொதுமக்களையும் ஒன்று சேர்க்கும் உயரிய நோக்கத்தில் திருச்சி மாநகர காவல்துறையினரால் “பகுதி ரோந்து விழிப்புணர்வு காவல் அலுவலர்கள்” (Sector Vigilance Police Officers) என்னும் புதிய திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டமானது மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் ரோந்து அலுவல் பணி மேற்கொள்ளும் காவல்துறையினரை கொண்டு செயல்படுத்தப்படும்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்