திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கு அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் கடந்த 02.12.2020 இரவு அண்ணாசிலை அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக TN 47 AS 8145 Hero Super Splendor என்ற இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கடந்த 27.11.2020 அன்று இரவு மதுரை ரோடு ஜீவா நகரில் உள்ள அண்ணா தெருவில் காணாமல் போனதாக கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனம் என தெரியவந்தது. அவர் அரியலூர்,பட்டினங்குறிச்சி ஆண்டிமடத்தை சேர்ந்த மலர்மன்னன் என தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் திருச்சிராப்பள்ளி மாநகரில் கோட்டை ,கண்டோன்மென்ட் மற்றும் தஞ்சாவூரில் வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.மேற்படி எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேற்படி வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.7,00,000/- மதிப்புள்ள 10 இருசக்கர வாகனங்களை மீட்ட தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்