திருச்சி : திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலருக்கு கொரோனா உறுதியானது. இதனால் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து காவலர்களுக்கும் கோரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை 48 ஆண் பெண் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.