திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, 04/11/19 ம் தேதி முதல் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் சுமார் இரண்டு வருடங்கள் நடைபெற உள்ளதால் அண்ணாசிலை பகுதிகளில் எந்த விதமான ஆர்பாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி