திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய சரகத்தில் உள்ள சித்தூர் நடுத்தெருவில் வசிக்கும் பெரியசாமி மகன் ராமச்சந்திரன் வயது 32 என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது உடன்பிறந்த அண்ணன் லெனின் என்பருடன் 11.11.2019-ம் தேதி இரவு 2 மணிக்கு தொட்டியத்தில் இருந்து சித்தூருக்கு புறப்பட்டு சென்று, சித்தூர் இரண்டாவது கேணி அருகே நின்று பேசிக்கொண்டிருந்த போது, சித்தூரை சேர்ந்த கிழக்கு தெருவில் வசிக்கும் பன்னீர்செல்வம் மகன் அஜய் (எ) அசோக்குமார் வயது 28 என்பவ,ர் தான் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திரன் கழுத்தில் வைத்து மிரட்டி, எனது வழக்கு செலவுக்கு பணம் கொடுடா என ராமச்சந்திரன் சட்டை பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.1800-ஐ பறித்துக் கொண்டு வழிப்பறி செய்தான்.
இதை பார்த்த இராமச்சந்திரனின் அண்ணன் லெனின் சத்தம் போட அவ்வழியே சென்ற மக்கள் கூட்டம் கூடவே, அஜய் (எ) அசோக்குமார் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய குற்ற எண்: 308/19, U/S 392, 397, 506(II) IPC ன் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடிவந்த போது 12.11.2019-ம் தேதி 11.45 மணிக்கு சித்தூர் ரேசன் கடை முன்பு எதிரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கண்ட நபர் மீது பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களை செய்பவராக இருப்பதாலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி மேற்கண்ட குற்றவாளியான அஜய் (எ) அசோக்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 30.11.2019-ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி மாநகர காவலில் 1 கைது
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மா மண்டபம் அருகே கடந்த 16.10.2019-ம் தேதி வாதி பாண்டியன் என்பவர் நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த எதிரிகள் 1.முகமது ரபி மற்றும் 2.பைசல் அகமது ஆகிய இருவரும் பாண்டியனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாதி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையம் கு.எண்- 517/19 U/s 392 r/w 397, 506(ii) IPC – ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேற்படி எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் எதிரிகள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரியவருவதாலும், அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் இன்று 30.11.2019 -ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி