திருவள்ளூர் : வட காஞ்சி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு செய்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்ற வந்தது. இதனை தொடர்ந்து பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை காமாட்சி அம்மையுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஈரோட்டத்தின் போது கைலாய வாத்தியங்கள் முழங்கி மேளதாளங்களுடன் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என முழங்கி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ துரை.சந்திரசேகர் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்து தேரில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு