திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆத்ரேயமங்களம் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை திருவிழா நடைபெற்று வருகிறது. 25 ஆம் ஆண்டாக மயான கொள்ளை திருவிழா கடந்த நான்காம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் பால்குடம் ஏந்துதல், கூழ் ஊற்றுதல், வாடை பொங்கல் நடைபெற்று நிகழ்ச்சியின் முக்கிய நாளான மயான கொள்ளை திருவிழா பிரம்மாண்ட அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்தில் இருந்து சுவாமி ஊர்வலம் நடைபெற்று மயான கொள்ளை நடைபெற்றது. நோய்களை தீர்ப்பது, குழந்தை பாக்கியம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் அம்மனாக திகழும் இந்த அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு