திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வட காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் சைவ சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர்களின் உற்சவர் மற்றும் மூலவர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் மேளாதாளங்கள் முழங்க புனித நீரானது ஊர்வலம் கொண்டுவரப்பட்டு பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு