மதுரை : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே வி.கோவில்பட்டி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவல்லி தாயார் என்ற மருதப்ப சாமி திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பாலாலயம் நடைபெற்றது. வீரபாகு கார்த்திக் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக வேள்வியினை நடத்தி பூர்ணாஹுதி நிறைவுற்று மேளதாளம் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ கதிரவன், விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன், செயலாளர் பால்பாண்டி, தக்கார் சுதா, பூசாரி கருத்தபாண்டி, திருப்பணி கமிட்டியாளர்கள் பாலசுப்பிரமணி, பழனிவேல், கண்ணன், பூர்வலிங்கம், மகாமுனி, செல்வம், வீரபாண்டி ,ஆர்கே சாமி ,வீரசிங்கம் தங்கதுரை மற்றும் நிர்வாகிகள் எட்டூர்கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி