கோவை: கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள நாகம்மா புதூரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் சரவணன் 23. இவர்அந்த பகுதியில் சிட்பண்ட்ஸ்- ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கும் பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வனுக்கும் 26. இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சண்முக சுந்தரம் அன்னூர் அருகே உள்ள மைல்கல் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் ராஜ ராஜன் , குட்டி என்ற ராஜேந்திரன்ஆகியோர் பைக்கில் அங்கு வந்தனர். 2 பேரும் சேர்ந்துமறைத்து வைத்திருந்த அரிவாளால் சண்முகசுந்தரத்தை சரமாரியாக வெட்டினார்கள் .இதில் அவருக்கு தலை, கழுத்து
,உட்பட பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.இதையடுத்து பேரும் இருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அன்னூர்காவல் நிலையத்துக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபடுகாயத்துடன் உயிருக்கு போராடிய சரவணனை சிகிச்சைக்காக அங்குள்ளதனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வழியில் அவர் இறந்தார்.இந்த நிலையில் சரவணனை கொலை செய்தஆட்டோ டி வர் தமிழ்ச்செல்வன் 26. ராஜ் ராஜன் 22. ஆகியோர்அன்னூர் காவல் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ராஜராஜன் இந்து முன்ன ணி வடக்கு மாவட்ட செயலாளர் ஆவார் தமிழ்செல்வன் இந்து முன்னணி தெற்கு யூனியன் துணைத்தலைவராக உள்ளார்.கொலை செய்யப்பட்ட சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திமுகவில் இணைந்துள்ளார் .கடந்த சில நாட்களாக அவர் தனது நண்பனிடம் தமிழ்ச்செல்வனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வந்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தனது வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதுஅந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சரவணன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நேற்று மாலை அன்னூர் காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
கொலைக்கு காரணமாக இருந்த முக்கிய நபரை கைதுசெய் வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர் .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடாபாக குட்டி என்ற ராஜேந்திரன், ரங்கநாதன் ஆகியோரை தேடி வருகிறார்கள் கொலை செய்யப்பட்ட சரவணன் குட்டி என்ற ராஜேந்திரன் ரங்கநாதன் ஆகியோரது சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் புதிதாக சிட்பண்ட்ஸ் தொடங்கியுள்ளார்.
