திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழக தி.மு.க சார்பில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கே தெருமுனை பிரசார பொதுக்கூட்டம். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர் .காந்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி. ஜே கோவிந்தராஜன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் பேரூர் கழகச் செயலாளர் க.சு. தமிழ் உதயன் தலைமையில் மீஞ்சூர் பேரூர் அவை தலைவர் ஜி. ராஜேந்திரன் முன்னிலையில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தலைமை கழக பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்து கொண்டு திமுக அரசின் 2 1/2 ஆண்டு சாதனைகளைப் பற்றி பொதுமக்களிடம் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை திட்டம், மகளிர் இலவச பேருந்து பயணம், இல்லம் தேடி மருத்துவம் , நான் முதல்வன் திட்டம் , இல்லம் தேடி கல்வித் திட்டம், கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திட்டம் , கொரோனா பேரிடர் காலத்தில் 4 ஆயிரம் வழங்கியது. உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் பற்றி எடுத்து கூறினார்.
இந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் மீ.வி. கோதண்டம் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத் அலெக்ஸாண்டர், மீஞ்சூர் பேரூர் கழக வ.மோகன், சு.கணேஷ், மணிமாறன், டில்லி, செந்தமிழ் சசி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா. மோகன்ராஜ் சாமுவேல், ஜோதி ஸ்ரீதர், லெனின், மதன், ஆ.ஜோசப், திருப்பதி, ஜோதி அக்கா, சிற்பி தீனதயாளன் க.சு தமிழ் பிரியன், தன்ராஜ், இளங்கோவன், கோபால், மீ.மு. ராமகிருஷ்ணன், ஏ.ரஜினி, கருணாகரன், ஜெய்சங்கர், மீஞ்சூர் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் மில்லர், தகவல் தொழில்நுட்ப அணி அண்ணாமலை, வார்டு செயலாளர்கள் அனஸ், முப்புராஜ், எழிலரசன், நாகராஜ், கக்கன் ஜி காலனி டி.எம்.சீனிவாசன், புங்கம்பேடு ராஜேஷ், முத்துக்குமார், இந்துஸ்தான் சீனிவாசன், ரமேஷ், தமிழரசு, ரியாஸ் அகமது, ஜெயம் பார்த்திபன், விமல் ராஜ், நாகராஜ், திருமலை, ஹரிஷ், ஆண்ட்ரூஸ், அப்துல் சமத் ,கலாநிதி, தேவராஜ், முருகேசன், அருண்நிதி, ஜான்சன், பாபு ,சேகர், சித்திரைவேல், விமல் ராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெயலக்ஷ்மி தன்ராஜ் ,பாஸ்கர், சங்கீதா சேகர், குமாரி புகழேந்தி, சுகன்யா வெங்கடேசன், கவிதா சங்கர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மீஞ்சூர் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க கழக மூத்த முன்னோடிகள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், பிறர் அணி துணை அமைப்பாளர்கள், மகளிர் அணிகள் நிர்வாகிகள் என இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை மீஞ்சூர் பேரூராட்சி 18 வார்டு பகுதிகளை சேர்ந்த வார்டு செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தனர். அதற்கு முன்பாக இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம் குறித்து துண்டு பிரசுரங்களை வீடுகள் மற்றும் கடையில் தோறும் வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு