திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறை அருகே மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் DSP திரு.மணிமாறன், தாலுகா DSP திரு.வினோத், மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு.பழனிச்சாமி அவர்களின் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் தலைக்கவசத்தின் அவசியத்தை பற்றியும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
இதில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களையும், உறவினர்களையும் தலைக்கவசத்தை அணிந்து கொள்ளச் செய்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் குழு அமைக்கப்பட்டு (Road Safety Patrol) பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகளை சாலையை கடக்கும் போது வாகனங்களை சீரமைத்து அனுப்பும் பணிகளை செய்ய உள்ளனர்